பொதுவாகவே இன்ஸ்பிரேஸனுக்கும்(Inspiration) அப்பட்டமான காப்பிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு நளாயினியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட 'ரோஜா'வும், மகாபாரதத்தில் கர்ணன்னுக்கும் துரியோதனனுக்கும் இருந்த நட்பை சொன்ன 'தளபதி'யும் முதல் வகை. 'பொம்மரில்லு'விலிருந்து அடிக்கப்பட்ட ராஜாவின் 'சந்தோஷ சுப்பிரமணியம்' இரண்டாம் வகை என்றாலும் இவை மொழிமாற்று 'ரீமேக்' என்ற பெயரில் நிதர்சனமாய் ஒரிஜினலிருந்து உருவப்படுகின்றன் (உ.தா. தமிழிருந்து இந்திக்கு சென்ற கஜினி).
விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்களே ஒரிஜினலை இன்ஸ்பிரேஷனாக கொண்டு, வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகின்றது. இருப்பினும் இவ்வகையான் ரீமேக்குகளின் மூலம் தமிழுக்கு சில தரமான படங்களும் (ஒரு பொம்முக்குட்டி அம்மாவுக்கு, காதலுக்கு மரியாதை) கிடைக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. அடுத்து ஆங்கில படங்களில் இருந்து அப்பட்டமாய் உருவப்பட்டு, நம்மூரின் திறமையான டைரக்டர்களின் கைவரிசையில் வெற்றிக்கரமாய் மாற்றம் செய்யப்பட்டு வெள்ளிவிழா கண்ட படங்களும் ஏராளம்(ஆங்கில Mementoவில் இருந்து அட்டகாசமாய் மாறி இந்தியாவையே கலக்கிய கஜினி)..
எனக்கு தெரிந்து தமிழில் ஆங்கிலப் படங்களை கரு மாற்றம் செய்து(சிலதை வெளிப்படையாய் சொல்லிவிட்டு - மற்றது கப்சிப்) அதிக அளவில் வெற்றிக் கண்டது கமலின் திரைப்படங்களே. ஏறக்குறைய கமலின் வெற்றிப் படங்கள் அனைத்திற்கும் ஒரு ஆங்கில ஒரிஜினல் இருப்பது, கமலின் பரம விசிறியான எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே..
என்னப் பண்றது, கமல் ரொம்ப சிந்திச்சு கஷ்டப்பட்டு எடுத்த அவருடைய சிறந்த படமான HEY RAAM-ஏ ரொம்ப சீக்கிரம் பெட்டிக்குள்ள தள்ளிட்டோம். நம்ம மக்கள் ரசனைக்கு எதுக்கு ரொம்ப மெனக்கெடனும் கமல் நினைக்கிறார் போல.. இனி கமலின் தமிழும் ஆங்கில ஒரிஜினல்களும்.
பி.கு: சொந்தச் சரக்கோ பாரின் சரக்கோ, தமிழ் சினிமாவிற்கு ஆக்ஸிஜன் ஊட்டும் எந்தச் சரக்கையும் சந்தோஷமாக அடிக்க நான் தயார்..
Patch Adams - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
Very Bad Things - பஞ்சதந்திரம்
What About Bob - தெனாலி
Planes, Trains and Automobiles - அன்பே சிவம்
The Reincarnation of Peter Proud - எனக்குள் ஒருவன்
Moon over parador - இந்திரன் சந்திரன்
Green Card - நள தமயந்தி
Nine to Five - மகளிர் மட்டும்
Mrs. Doubtfire - அவ்வை சண்முகி
She-Devil - சதி லீலாவதி
Tie Me Up, Tie Me Down - குணா
To Sir, With Love - நம்மவர்
Friday, March 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
உண்மையை ஒப்புக் கொள்ள (நல்ல) மனது வேண்டும். கமல் ரசிகராக இருந்து ரகசியங்களை வெளிப்படுத்தியதற்கு பாராட்டுகள் !
நல்ல பதிவு அண்ணாத்தே...
நல்ல பதிவு அண்ணாத்தே...
கமல் அப்படியே அதல பாதளத்தில் தள்ளிட்டிங்க..உண்மை தான்...எரிச்சலாக இருக்குங்க..ஒரு நல்ல கதை கூட கொடுக்க முடியாதளவிற்கு நாம இருக்கோம்..???
What about mahanadi & devar magan, -- both of which I consider kamal's best.
Except Patch Adams, all are his direct lifts. Very embrassing thing is, no reporter or TV interviewer have not been asking him directly about his lifts and so called inspiration. May be thats why he called WORLD HERO ?? Mohanalal or Mamoorty or any other good actors, never lifting stories, movies etc from Hollywood as much as Kamal.
அட நல்லா சினிமா பார்க்கிறீர்கள் போல.
தகவலுக்கு நன்றி.
original பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வந்திருக்கு
Absolutely right. But I wish to say that our people had the opportunity to see such good films through Kamal. Atleast he did not murder good films like P.Vasu(Manichitra thaz, Bharatham, Katha parayum pozh...). True, he never said anything about these"inspirations".
வருகைக்கும் பின்னூட்டமிட்டவர்களுக்கும் மிக்க நன்றி..
Vijay, இன்னும் இந்த original-a பார்க்கலை.. ஆனா, கேள்விப்பட்ட வரையும்,
மகா நதி - Hardcore
விருமாண்டி - The life of David Gale..
தேவர் மகன் - இது காட்பாதரின் இன்னொரு வெர்சன்னு கமலே ஒரு பேட்டியில சொன்னதாக நினைவு..
எங்க சுட்டா என்ன சார் மனசைத் தொடுதா அதுதான் முக்கியம்
ஆனால் இவையெல்லாம் தன் சொந்த கதை என கதை விடுவதுதான் சரியில்லை
silvester stallone's LOCK UP - MAHANADHI
//கமல் அண்ணாத்தே, சொந்தப் படம் எடுக்கற நீங்க, சொந்தமா எப்போ படம் எடுப்பீங்க?? //
ஹலோ...என்னங்க ஒரு உலக நாயகனைப் பார்த்து இப்படிக் கேட்டுடீங்க.. அவர் எப்போ சொந்தமா யோசிச்சாரு?
ஆனா இவ்ளோ வெளிநாட்டுப் படங்களை அறிமுகப்படுத்திய அவரை கண்டிப்பாக நாம் பாராட்ட வேண்டும்
இப்படி வீட்ல உக்காந்துக்கிட்டு வசனம் பேசுறது சுலபம்!
Post a Comment