Tuesday, March 17, 2009
சாப்ட்வேர் இஞ்சினியராய் வடிவேலு..
"காது இந்த வீங்கு வீங்கியிருக்கே, எத்தனைப் பேரு உங்களை பேசினாங்க?"
"முதல்ல ஒரு மூணு நாலுப் பேருத்தான் பேசினாங்க. பேசிக்கிட்டே இருக்கும்போது ஒரு மேனேஜரு, இன்னொரு மேனேஜருக்கு போன் பண்ணி, "ப்ரீயா இருந்தா வாங்க, ஒருத்தன் சிக்கி இருக்கான்"ன்னு சொன்னான்.
அந்த மேனேஜரு சொன்னான், "நான் கொஞ்சம் பிசியா இருக்கேன், வேணும்னா, என்னோட ரூமுக்கு அனுப்பி விடு, நான் பார்த்துக்கறேன்"-ன்னான். இவனுங்க முடிச்சவுடனே ஒரு கம்பெனி ஷட்டில புடிச்சு, அந்த மேனேஜருக்கிட்ட அனுப்பி விட்டுட்டாங்க. அங்க ஒரு ஏழுப் பேரும்மா. அவங்களால எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பேசினாங்க.. அந்த மீட்டிங் முடிஞ்சதும், இன்னொரு ஷட்டில புடிச்சு, என்னை ஏத்தி விட்டுட்டாங்க..
சரி நம்மள வேலையை பார்க்கத்தான் அனுப்பறாங்கன்னு நம்பி ஏறி உட்கார்ந்தேன்-மா. அந்த ஷட்டிலு நேரா இன்னோரு 2nd லெவல் மேனேஜரு பில்டிங்க்கு போச்சு.. அந்த மேனேஜரு ரூமுக்குள்ள 11 பேரும்மா.. 3 மணி நேரம்.. காது வலிக்க வலிக்க பேசினாங்க.. சரி பேசிட்டு போங்கடான்னு விட்டுட்டேன்.."
"விட்டுட்டிங்களா, திரும்பி நீங்கப் பேசலை??"
"இல்லை"
"ஏன்?"
"அவங்க பேசும்போது ஒருத்தன் சொன்னான், 'எவ்வளவு பேசினாலும், இவன் கேட்கிறான்டா, இவன் ரொம்ப நல்லவன்'டான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாம்மா. நானும் இவனுங்க பேசறதக் கேட்கற மாதிரியே எவ்வளவு நேரம் தான் நடிக்கறது"..
உ ஊ ஊஊஊஊஊ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment