Friday, March 13, 2009

அன்றும், இன்றும்..



மீசையுடன் அரும்பத்
தொடங்கியதும் காதல்..
மீசையுடன் நரைக்கத்
தொடங்குவதும் காதல்...

சாபம் கொண்ட நெருப்பினால்
மதுரை எரிந்ததும் காதல்..
கோபம் கொண்ட விழியினால்
நீயென்னை எரிப்பதும் காதல்...

பார்வதி பின் சென்று
தேவதாஸ் ஆனதும் காதல்..
யுவதிகள் பின் சென்று
அகதிகள் ஆவதும் காதல்..

'அடி'யவள் வந்ததும்
'குடி'யவன் விட்டதும் காதல்.
'புதுவை' சென்றதும்,
மதுவை கொள்வதும் காதல்..

பிரிந்த அக்கணங்களில்,
தாடியை வளர்த்ததும் காதல்..
சேர்ந்திருக்கும் இக்கணங்களில்
தாடி வளர்வதும் காதல்..

அன்று
காதல் போயின்
சாதல் சாதல்..

இன்று
சாதலே ஆயினும்
வேண்டாம் இக்காதல்..

2 comments:

Anonymous said...

யுவதிகள் பின் சென்று
அகதிகள் ஆவதும் காதல்..

'புதுவை' சென்றதும்,
மதுவை கொள்வதும் காதல்..

நண்பா! உன் கவிதைகள் நன்கு ரசிக்கும் வண்ணம் உள்ளது..

தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

Venkat said...

ஷீ-நிசி, தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி..

Post a Comment