Sunday, March 15, 2009

நினைவுகளில் விகடன் - 1

விகடனின் நீண்ட நாள் வாசகன் என்ற முறையில், விகடனில் வெளிவந்த, என்னை பாதித்த படைப்புக்களை பகிரும் ஒரு முயற்சி..

பத்து ஆண்டுகளுக்கும் முன்னர், விகடனில் வெளிவந்த இக்கவிதையை(முத்திரை?), இன்றும் யாராவது நினைவில் வைத்திருக்கின்றீர்களா? ஒருப் பெண்ணின் வல்லிய பிரச்னையை 5 வரிகளில் உணர்த்தும் இக்கவிதை சுஜாதா பிரபலப்படுத்திய Haiku (கவிதையின் இறுதி வரியில் ஒரு மெல்லிய திடுக்!!) வகையறாவை ஒத்திருக்கும்.

குப்பைத் தொட்டியின்கீழ்
ரத்தம் தோய்ந்த
சானிடரி நாப்கினை
பார்க்கையில்
அடிவயிற்றை வலிக்கின்றது..
ஆண்மகனாகிய எனக்கும்..

(இதை எழுதிய கவிஞர் பெயர் நினைவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்).

4 comments:

Anonymous said...

நல்ல உடல்நிலை இருந்தால் மாத மாதம் அடிவயிறு வலிக்காது!
ஒரு வேளை இப்படி சொல்லலாம்!

பார்க்கும் குழந்தை எல்லாம்
என்னுள் உயிர்த்தது போலிருந்தது
நான் ஆணாகியபோதும்!



இது தந்தைமை?

Anonymous said...

நல்ல உடல்நிலை இருந்தால் மாத மாதம் அடிவயிறு வலிக்காது!
ஒரு வேளை இப்படி சொல்லலாம்!

பார்க்கும் குழந்தை எல்லாம்
என்னுள் உயிர்த்தது போலிருந்தது
நான் ஆணாகியபோதும்!



இது தந்தைமை?

நாஞ்சில் பிரதாப் said...

நானும் கிட்டத்தட்ட ஒரு 17 வருடமா படிக்கிறேன்...ஆனா ஒண்ணுமே நினைவில் இல்லையே...அது எப்படிங்க...???
கவிதை டக்கரு...உங்க நினைவுத்திறனும்...நல்லா எழுதுங்க.... வாழ்த்துக்கள்.

ttpian said...

sorry,i didn't write this lyric...hi...hi

Post a Comment