Thursday, February 5, 2009

கர்ணன் Vs அர்ஜுனன்!!

முதலில் கதை!!

கர்ணனுக்கு கிடைக்கும் புகழ் குறித்து அர்ஜுனனுக்கு எரிச்சல். அதை கண்ணனிடம் தெரியப் படுத்தினான்.

அவனைத் தெளிய வைக்க எண்ணிய கண்ணன், ஒரு நாள், ஒரு தங்க குன்று ஒன்றை உருவாக்கி, அர்ஜுனனை அழைத்து ஒரு மண் வெட்டி ஒன்றைக் கையில் கொடுத்து, “ இந்த குன்றை இன்று மாலைக்குள் காலி செய்.. யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் தானம் செய்து கொள்” என்றான்.

அர்ஜுனனும் காலையிலிருந்து போவோர் வருவோருக்கெல்லாம் வெட்டி வெட்டி கொடுத்துக் கொண்டே இருந்தான். தங்கம் தீருவதாகத் தெரியவில்லை. மாலையும் ஆகி விட்டது. இன்னும் அரைமணி நேரத்திற்குள் முடிவதாகவும் தெரியவில்லை. கண்ணனை அழைத்துச் சொன்னான் அர்ஜுனன்.

இதற்காகவே காத்திருந்த கண்ணன், கர்ணனை அழைத்து விபரம் சொன்னான்.

சரி என்று தலையாட்டிய கர்ணன், அவ்வழியே சென்ற இருவரை அழைத்து, ” இந்தத் தங்க குன்றை பாதிப் பாதியாக்கி, நீங்கள் இருவரும் வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினான்.

அப்பொழுத்தான் அர்ஜுனனுக்கு புரிந்தது, அவனவன் தகுதிக்கான புகழ்தான் கிடைக்கும், அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப் படுவதில் அர்த்தமில்லையென்பது.

இப்போ என்னேட கேள்வி??

கொடுப்பது எனத் தீர்மானித்ததும், தானத்தின் அளவை மதிப்பிடாமல், ஒரு நொடியினில் தானம் செய்துவிட்ட கர்ணன், கொடையில் சிறப்பினும், அவ்வளவு தங்கத்தையும் இருவருக்கு மட்டுமே பகிர்ந்தளித்தான்.

விலையுர்ந்த தானம் என்பதால் எல்லோருக்கும் 'பகிர்ந்தளிப்போம்' என்று எண்ணி, அளந்து மதிப்பிட்டு, எல்லோருக்கும் தானம் செய்தாலும், தானத்தை அளந்ததான் அர்ஜுனன்..

ஆகக் கூடி, கர்ணன் சிறந்தவனா, அர்ஜுனன் சிறந்தவனா?

2 comments:

பிரசன்னா கண்ணன் said...

Its a story between Karnan & Dharman..
Don't know how Arjunan came in this..

Venkat said...

இருக்கலாம், நான் இணையத்தில் தான் இந்தக் கதையைப் படிச்சேன்.. கேள்வி மட்டும் தான் என்னுடையது.. தர்மராக இருந்தாலும், என்னுடையக் கேள்வி பொருந்தும்-ன்னு நினைக்கிறேன்..

Post a Comment