Thursday, February 5, 2009

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்!!

அருமையான பாடல் written by Ilayaraaja and wonderfully sung by Madhu Balakrishnan..

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
யாம் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா?
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?
அம்மையும் அப்பனும் தந்ததா?
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?
இம்மையை நான் அறியாததா?
இம்மையை நான் அறியாததா?
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ்விடதில்..
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ்விடதில்..
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்..

ஒரு முறையா இரு முறையா பலமுறை பல பிறப்பெடுக்க வைத்தாய்..
புது வினையா பல வினையா, கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே..
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்..
மலர் பதத்தால் தாங்குவாய்..
உன் திரு கரம் எனை அரவனைத்து உனதருள் பெற..

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே

No comments:

Post a Comment