Saturday, March 21, 2009

டைரக்டரு ஷங்கரு, இதுக் கரீக்டா??

போன வாரம் ஒளித்தட்டுல 'இந்தியன்' படத்தை மீண்டும் பார்த்தேன்.. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் 'பச்சைக்கிளிகள் தோளோடு' பாடலின் இறுதியில் வரும் இக்காட்சி படத்துடன் ஒன்றிப் பார்க்கையில் பிரமிப்பாக இருந்தது. படம் முடிந்ததும், மீண்டும் பாடல்களை மட்டும் ஓட விட்டு பார்க்கையில், பாடல் காட்சியில் இருந்த சிறு தவறு பிசிறியது. அது என்னக் காட்சின்னு இந்த நிழற்படத்தில் பாருங்க (எல்லாப் படத்தையும் க்ளிக் செஞ்சு பெரியதா பார்க்கலாம்).





என்னத் தப்புன்னு கண்டுப்பிடிச்சுட்டிங்களா? கூகிளாண்டவரில் தேடியதில், ஒரிஜினல் கிராபிக்ஸ் காட்சியில் இரண்டு கமல் ஆடும்படி மட்டுமே அமைப்பதாக முதலில் ஷங்கருக்கு எண்ணமாம். பட வேலைகளின் போது, கிராபிக்ஸ் இயக்குனர் வெங்கி, இரண்டு கமலுக்கும் பின்னால் ஒரு கண்ணாடியை போட்டு, கமலின் உருவ பிரதிபலிப்பைக் காட்டினால் இயல்பாய் இருக்கும் என்று ஷங்கரிடம் ஒகே வாங்கி, அந்த அலமாரியும், கமலின் பிரதிபலிப்பையும் கிராபிக்ஸில் கொண்டு வந்தாராம். கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டதாலோ என்னவோ, ஒவ்வோரு காட்சியையும் மிகவும் சிரத்தையுடன் அணுகும் ஷங்கர், இதை கவனிக்க தவறிட்டாருன்னு நினைக்கிறேன்..

இன்னும் இந்தக் கிராபிக்ஸ்ல என்ன தப்புன்னு கேட்கிறவங்களுக்கு, மூணு விஷயம்.

1. நிழற்படத்தோட தரம் சரியில்லன்னு நான் முதல்ல ஒழுங்கா ஒத்துக்கறது(பின்ன youtube-ல இருந்து சுட்டா??),
2. என்ன தப்புன்னு, படத்துல வட்டம் போட்டு காட்டிடறது..



3. அப்படியும் புரியாத 'ஓளிவிளக்கு'-க்கு (அதுதாங்க tubelight), கண்ணாடிக்கு முன்னே நின்னு பார்த்தா உங்க முகம் தெரியும், கண்ணாடிக்கு முதுகு காமிச்சு நின்னாலும், கண்ணாடியில் உங்க முகம் தெரியுமா??

ஒரிஜினல் பாட்டுக் கீழே, நீங்களே பார்த்துக்கங்க..

15 comments:

Anonymous said...

Eppadi ippadi ellaam kavanikareenga...?

Anonymous said...

நல்லா கூர்ந்து கவனிச்சு எழுதி இருக்கீங்க !!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க

Venkat said...

வருகைக்கு நன்றி மது!! தமிழ் சினிமாவில் இது போல நிறைய அபத்தங்கள் உண்டு.. நேரம் கிடைக்கும்போது பதிவறேன்..

Raju said...

ஹலோ சங்கரு...உங்கள கண்காணிக்க ஒரு ஆளு வந்துட்டாப்ல...
பாத்து "எந்திரன" எடுங்க.....
என்னம்மா கண்ணுல வெலக்கெண்ணை ஊத்திக்கிட்டு பாக்குறாங்கே..
(ஏண்டா டக்ளஸ்! உனக்கு மட்டும் இந்த மாதிரி எதுவுமே தோண மாட்டேங்குது...)

kannen said...

சபாஸ் சரியான போட்டி

Unknown said...

நல்ல கவனிப்பு.

அந்த காலத்தில் “பொம்மை”
என்ற சினிமா பத்திரிக்கை உண்டு. அதில் சினிமாவில் வரும் இது போல தப்புக்களை வாசகர்கள் எழுதியிருப்பார்கள்.அது மாதிரி ஆங்கிலத்தில் ‘Film Fare" பத்திரிக்கை.

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆஹா..

குற்றம் கண்டுப்பிடித்து பேர் வாங்குவது இதுதானா??

Anonymous said...

iyyo nejamalume naan tubelightthan pola irukku thanks for your "vattam"

சின்னப் பையன் said...

முடியல...

:-)))))))))))))

Anonymous said...

Enna paarvai... unthan paarvai.....

உண்மைத்தமிழன் said...

நல்ல கண்டுபிடிப்பு..!

Rajes kannan said...

பாட்டை கூட இவ்வளவு கவனிச்சு பாத்து இருக்கீங்களே, வேற எதயாச்சும் தேடும்போது இது மாட்டுச்சா?

Suresh said...

Nan tube light ellai he he kandu pudichitan
really oru patta kuda eppadi parka mudiyuma periya aluya neer :-)

அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)

Venkat said...

இதை படிச்சுட்டு, கண்டிப்பா எல்லோரும் ஒரு நிமிஷமாவது யோசிச்சிங்களா? கண்ணாடி முன்னே நின்னா எப்படி இருக்கும்-ன்னு :-) :-)

வருகைக்கும் பின்னூட்டமிட்டவர்களுக்கும் மிக்க நன்றி..

Post a Comment