Thursday, February 5, 2009

பூ - விமர்சனம்



My suggestion, இப்படத்தின் எந்த ஒரு காட்சியையோ, கதையையோ கேட்காமல், படிக்காமல் இப்படத்தை பார்க்கவும்.. நானும் எதையும் சொல்லப் போவது இல்லை..

என்னைப் பொறுத்த வரையில், மாரியாக நடித்திருக்கும் பார்வதிக்காகவே இப்படத்தை பார்க்கலாம். படத்தின் இறுதிக் காட்சிகளில் சசியும், மாரியும் உலுக்கி எடுத்து விடுகின்றனர்..

இது நிச்சயமாய் வழக்கமான தமிழ் படம் கிடையாது. ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் கதைக்களம், அழுத்தமான மிகைப்படுத்தப்படாத நிகழ்வுகள், இப்படியும் இருக்க முடியுமா என்பதை விட, இப்படித்தான் நான் எனும் மாரியின் கதாப்பாத்திரம் மற்றும் இன்ன பிற வழக்கமான தமிழ் சினிமா விடயங்கள் இல்லையென்பதே, படம் மிக மெதுவாக நகர்வதாக எழும் எண்ணத்திற்க்கு காரணம்.. இத்தகைய காரணங்களைக் கொண்டு பூ போன்ற நல்ல முயற்சிகளை ஒதுக்கக் கூடாது..

பாலசந்தர் படங்களில் காட்டப்பட்ட பெண் கதாபாத்திரங்களையும், "Shoba"வின் ஒரு சில முயற்சிகளையும் தவிர்த்து பார்த்தால், பூ தமிழ் சினிமாவின் முதல் "Heroinism" படம்.

மிக மிக வருத்தமான விடயம், மலையாள "accent"-ல் இருந்து வெளியே வர முடியாததால், படத்தில் பார்வதியின் குரலுக்கு "dubbing" செய்துள்ளனர். இதனாலேயே இவ்வருடத்தின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை இழக்கின்றார், பார்வதி..

காதலையும், அதன் நேசத்தையும், முதல் முறையாய் உணர்ச்சிப்பூர்வமாய் தமிழ் சினிமாவில் பதிவு செய்துள்ள சசிக்கு பாராட்டுக்கள்..

No comments:

Post a Comment